search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கியாஸ்"

    ஆண்டிப்பட்டி பகுதியில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்படுவதில் முறைகேடு நடந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    மத்திய அரசு ஏழை எளிய கிராமப்புற குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பாரதப் பிரதமர் உஷாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புகையில்லா இலவச கியாஸ் இணைப்பு வழங்கி வருகிறது.

    அதன்படி எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி.சி. பிரிவினர், மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு விதிகளுக்குட்பட்டு, இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தற்போது ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் இயங்கி வரும் தனியார் கியாஸ் ஏஜென்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனைத்து பிரிவினருக்கும், பணத்தை பெற்றுக் கொண்டு கேஸ் இணைப்புகள் வழங்கி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்ப பிள்ளைபட்டி, பொட்டவாத்து, ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்த விதிகளை பின்பற்றாமல் 500-க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

    பிச்சம்பட்டி ஊராட்சியில் மட்டுமே 200 இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் அரசுக்கு 20 லட்சத்திற்கும் மேல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்கவும், விதி மீறி வழங்கப்பட்ட இணைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். #tamilnews
    ×